Yesu Nam Pinigalai - இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் J29

இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து
கொண்டார் இயேசு

நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
நம்மை நலமாக்கும் தண்டனை
அவர் மேல் விழுந்தது

அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் நாம்

கொல்வதற்காய் இழுக்கப்படும்
ஆட்டுக்குட்டியைப் போல மயிர்
கத்திரிப்போன் முன்னிலையில்
கத்தாத செம்மறி போல
வாய்கூட அவர் திறக்கவில்லை
தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்

நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்
இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
கழுமரத்தின் மீது தம் உடலில்
நம் பாவங்கள் அவர் சுமந்தார்