நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
1.உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
2.நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்