Eppadi Paaduven Naan En - எப்படி பாடுவேன் நான் என் J15

எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2

1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்iலை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்

3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசிர்வதித்தீர்